×

அரசு பெண் வக்கீல், மகளை கொல்ல முயற்சி கல்லூரி மாணவரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (40). இவர், மாவட்ட மகளிர் கோர்ட்டில் அரசு வக்கீலாக உள்ளார். இவரது மகள் நிஷா (21). இவர், சேலம் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஜமீலா பானு தனது மகளுடன் குமரன் ரோடு, பெஸ்ட் காம்பளக்ஸ்சில் உள்ள அலுவலகத்தில் இருந்தார். அப்போது ஒரு வாலிபர், அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்து, ஜமீலா பானு மற்றும் அவரது மகள் நிஷாவை தலை, கை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில், பலத்த காயம் அடைந்த இருவரும் அலறி சத்தம்போட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த வாலிபர், அங்கிருந்த தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த தாய், மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான்கான் (25). இவரும், சேலம் அரசு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது நிஷாவுக்கு, ரகுமான்கான் காதல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிஷா சேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமான்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 நாட்களுக்கு பின், ரகுமான்கான் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் தள்ளிய ஆத்திரத்தில் இருந்த ரகுமான்கான் நேற்று அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவரது தாய் ஜமீலா பானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். அவர்கள் கூச்சலிட ரகுமான்கான் அங்கிருந்து தப்பி ரோட்டில் அரிவாளை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். தலைமறைவான ரகுமான் கானை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரகுமான்கானை தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்….

The post அரசு பெண் வக்கீல், மகளை கொல்ல முயற்சி கல்லூரி மாணவரை பிடிக்க தனிப்படை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Jamila Banu ,Velliangat ,Tirupur district ,
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது